செய்திகள்

செல்ல மகளின் பெயரோடு புகைப்படத்தையும் வெளியிட்டார் அனுஷ்கா

முக்கிய நட்சத்திரங்களான விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்திருந்தது. 

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்திருந்தது. 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செல்ல மகளின் பெயரோடு புகைப்படத்தையும் வெளியிட்டார் அனுஷ்கா 1

தமது செல்ல மகளை பார்த்து சிரித்தபடி ரசிக்கும் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறமையும் குறிப்பிடதக்கது.  

Back to top button