செய்திகள்

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்; விபரீத ராஜயோகத்தில் புரளும் அந்த ராசியினர்கள் யார் தெரியுமா?

மேஷம், விருச்சிக ராசிக்கான அதிபதி செவ்வாய் பகவான். பிப்ரவரி 22ம் தேதி, சுக்கிரன் ஆட்சி செய்யக்கூடிய மேஷ ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் உச்சமடையும் போது, அதன் நன்மைகளைப் பெறும் போது ஒருவர் தைரியமாகவும், அச்சமின்றி, மனரீதியாகவும், லட்சியத்தை நிறைவேற்றுவார்.

ரிஷபம்

ரிஷப ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கக்கூடிய காலம் மிக அற்புதமானது. உங்களின் பல்வேறு பிரச்னைகள் தீரவும், முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களின் எதிரிகளின் தந்திரங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

செவ்வாய்க் கிரகத்தின் பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் நிலுவையில் உள்ள செயல் திட்டங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இந்த காலத்தில் செய்யும் முதலீடு உங்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரம் செய்யும் நபர்கள் நல்ல லாபம் ஈட்டுவார்கள்.

மேலும் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடகம்

செவ்வாய் உங்களுக்கு 11ம் இடத்தில் அமைவதால் உங்களின் செயல் திறன் சிறக்கும். உங்களின் கடன் தீர மிக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்.

குடும்பத்துடன் நல்ல உறவுகள் உருவாகும், உடன்பிறப்புகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

உங்கள் வேலையில் சிறப்பாக பங்களிப்பீர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் அறிவுரை உங்களை மேம்படுத்த உதவும்.

சிம்மம்

சிம்ம ராசியில் செவ்வாய் கிரகத்தின் நட்பு கிரகம் சூரியன் ஆட்சி செய்யக்கூடியது. ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் தனது 4ம் பார்வையால் சிம்ம ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

நீங்கள் வாழ்க்கையின் வெற்றியைப் பெறக் கூடிய காலம். மேலும் ஒரு புதிய தொழிலைத் தொடங்க முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல சாதகமாக இருக்கும்.

உங்களின் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும், இது உங்களில் வேலை மற்றும் குடும்ப பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். மேலும் பழைய முதலீடுகள் உங்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும்.

விருச்சிகம்

ரிஷபம், விருச்சிக ராசி நாதனான செவ்வாய் ரிஷப ராசியில் அமர்ந்து தனது 7ம் பார்வையால் விருச்சிக ராசியைப் பார்க்கிறார்.

உங்கள் சக்தியை அதிகரிக்கும். திடீர் லாபத்திற்கான வாய்ப்புகள், அதிர்ஷ்டமும் கிடைக்கும். சட்ட வழக்கு விஷயங்களில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள்.

குடும்ப சூழ்நிலை அமைதியானதாக இருக்கும். உறுப்பினர்களிடையே அன்பும் ஒத்துழைப்பும் இருக்கும். பொருளாதார நிலை மற்றும் மரியாதை முன்னேற்றமானதாக இருக்கும்.

சிறு வணிகர்கள் பயனடைவார்கள், பழைய கடன்களிலிருந்து விடுபடுவார்கள்.

தனுசு

உங்கள் ராசிக்குயை செவ்வாய் பகவான் தனது 8-ம் பார்வையால் நற்பலனகளை அருள்வார். உங்களின் வேலையின் செயல்திறன் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் சம்பளம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான நன்மைகளைத் தரும் மற்றும் நாட்பட்ட நோய்களிலிருந்து முன்னேற்றமான நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.

வேலையை மாற்றுவது குறித்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சாதகமானதாக இருந்த காலம் இருக்கும். பண விஷயங்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.

மேலும், புதிய தொழிலைத் தொடங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமானதாக அமையும். குழந்தைகளுடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். கல்வி நிலை மேம்படும்.

கும்பம்

ரிஷப ராசியில் அமரும் செவ்வாய் கிரகம் உங்களின் பெருமையையும் மரியாதையையும் அதிகரிக்கும்.

இந்த நேரத்தில், நிலம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். லாபம் உண்டாகும். உங்கள் வேலையில் உற்சாகமும் சக்தியும் அதிகரிக்கும்.

வீடு பழுதுபார்ப்பு அல்லது அலங்காரப் பணிகள் விரைவாக முடியும் மற்றும் வீட்டிற்கு புதிய வாகனம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வாங்கும் சிறப்பான வாய்ப்பு பெறுவீர்கள்.

Back to top button