செய்திகள்

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அண்டைய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி.!

இந்தியா, பாக்கிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதனடிப்படையில், இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன் வெங்காயமும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயமும் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

Back to top button