செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து அரசாங்கம் அறிவிப்பு !

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் ம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்த ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Back to top button