செய்திகள்

தூரப் பிரதேச ரயில் சேவைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்

தூர பிரதேச ரயில் சேவையை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக  ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கசுன் சாமர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும்  கூறுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ரயில் நிலைய மட்டத்தில் பல பாதுகாப்பு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவையில் ஈடுப்படும் ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய புத்தளம் ரயில் வீதியில் 2 ரயில் பயண சேவையும், களனி வழி  பாதையில் 2 ரயில் பயண சேவையும்,கரையோர பகுதியில் 4 பயண சேவையும்,  வடக்கு  மற்றும் பிரதான ரயில் பாதையில் 6 பயண சேவையும் ஈடுபடும்.

அடுத்த வாரம் முதல் தூர போக்குவரத்து ரயில் சேவையினை மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ரயில் சேவையில் சுகாதார பாதுகாப்பு  வழிமுறைகளை  முழுமையாக செயற்படுத்துமாறு சுகாதார தரப்பினருக்கும், ரயில் திணைக்களத்துக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

Back to top button