செய்திகள்

நடிகர் விவேக்கிற்காக சாப்பிடாமல் காத்திருக்கும் நாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

நடிகர் விவேக் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், அவரது மனைவியின் அண்ணன் கூறிய பல நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம்.

திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் திகதி உயிரிழந்த விவேக் குறித்து பிரபலங்கள், உறவினர்கள் என அனைவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தனது வாழ்விலும், பொது வாழ்விலும் அக்கறையுடன் செயல்பட்ட விவேக் சமூக அக்கரை கொண்டதுடன் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இவரது திடீர் மறைவு தற்போது வரை யாராலும் நம்பமுடியாத நிகழ்வாகவே இருந்து வருகின்றது. ஆம் அந்த அளவிற்கு வெளியிடங்களில் தனது ஈடுபாடு அதிகமாக காட்டியுள்ளார்.

சரி நடிகர் விவேக் வெளியிடங்களில் இவ்வாறு சமூக அக்கறையுடன் காணப்படுகின்றார். வீட்டில் எவ்வாறு இருப்பார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். இதற்கு பதிலாக விவேக் மனைவியின் அண்ணன் பல நிகழ்வுகளைக் கூறியுள்ளார்.

விவேக்கிற்கு வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டுமாம். சினிமா படப்பிடிப்பு முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன? அதற்கான தீர்வுகள் குறித்து பேசிய பிறகு தான் ஓய்வெடுக்க செல்வாராம்.

தன்னுடைய மனைவியை, தந்தையை இழந்து நின்ற போது, உறுதுணையாக இருந்ததாக நெகிழும் விவேக்கின் மச்சான், கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதாரத்தின் மீது தனி கவனம் செலுத்துவார் என்றும், நாட்டு நடப்புகள் மற்றும் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விவேக் வளர்த்த நாய் தற்போது வரை சோகத்தில் இருப்பதுடன், சாப்பிடாமல் அவரது போட்டோவிற்கு அருகிலேயே இருக்கின்றதாம். வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று அவரை தேடிவருவதுடன் எப்பொழுதும் சோகத்துடனே காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது கூட தனது நாயிடம் வீடியோவில் வந்து பேசுவாராம் நடிகர் விவேக்.

Back to top button