செய்திகள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 9 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு விபரங்கள் இதோ !

இலங்கையில் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் 5 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நண்பல் 12 மணி வரையான நிலவரப்படி கொழும்பில் 68 வீதமான வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 65 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தறை மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 74 வீதமான வாக்குப்பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப்பதிவுகளும் காலி மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 65 வீதமான வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தில் 75 வீதமான வாக்குப் பதிவுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் 67 வீதமான வாக்குப்பதிவுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீதமான வாக்குப்பதிவுகளும் கண்டி மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப்பதிவுகளும்  பதுளை மாவட்டத்தில் 65 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 76 வீதமான வாக்குப்பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 73 வீதமான வாக்குப்பதிவுகளும் வன்னி மாவட்டத்தில் 74 வீதமான வாக்குப்பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் மொனராகலை மாவட்டத்தில் 73 வீதமான வாக்குப்பதிவுகளும் அநுராதபுர மாவட்டத்தில் 70 வீதமான வாக்குப்பதிவுகளும் குருணாகல் மாவட்டத்தில் 65 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

9 ஆவது இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 12985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

அதிகமான வாக்காளர்கள் பதிவான இடமான கம்பஹாவில் 1785964 பேர் வாக்களர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாளை காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்காக 69,000 பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 19 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 18 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 10 பேரும் கண்டி மாவட்டத்தில் 12 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 05பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 08 பேரும் காலி மாவட்டத்தில் 09 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 07 பேரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07 பேரும் யாழ். மாவட்டத்தில் 07 பேரும் வன்னி மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 07 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 04 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 15 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 08 பேரும் அனுராதபுரம் மாவட்டத்தில் 09 பேரும் பொலன்னறுவை மாவட்டத்தில் 05 பேரும் பதுளை மாவட்டத்தில் 09 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 06 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 11 பேரும் கேகாலை மாவட்டத்தில் 09 பேரும் என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Back to top button