செய்திகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவித்தல்

நாளை முதல் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும்.

நாளை, ஜுன் 06 சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை.

மேலும் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்திச்செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

Back to top button