செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது..!

வெயாங்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டி காவல்துறை பிரிவுகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் அங்கிருந்து வெளியேறுவதற்கும், குறித்த காவற்துறை பிரிவுகளுக்கு பகுதிகளுக்கு உட் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை, திவுலுபிட்டிவில் பயண அனுமதி தேவைப்படுவோர் 0718591617 அல்லது 0718591628 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

கம்பஹா பகுதியில் எவருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button