செய்திகள்
நாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!
கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ண பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை 2020 ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை நீக்கியுள்ளார்.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்
Corona news update : கொரோனா வைரஸ் தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் ?
Sources Virakesari.lk