செய்திகள்

நாளை 8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது நினைவில் கொள்ள வேண்டியது!

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கில் 5 மாவட்டங்களில்  அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் போது பெருமளவான மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முண்டியப்பர் என்பதால் வர்த்தக நிலையங்களில் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதுகாப்பு துறையினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டவுடன் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வெளியிடங்களுக்குச் செல்லும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்து மாறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இரு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைபிடிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும் என்றும் இ செல்லும் போது ஒருவர் மாத்திரம் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயங்களின் போது தனியார் ஆலோசனைகளைக் கடைபிடிக்குமாறும் இ வயோதிபர்களைவ வீட்டிலேயே தங்க வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலவிடும் நேரத்தை வரையறை செய்து கொள்வது சிறந்ததாகும். வர்த்தக நிலையங்களில் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதை கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், முகாமையாளர்கள், பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.

வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்புபவர்கள் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button