செய்திகள்

பஸ் சேவைகளை பெறும் பயணிகளுக்கான அறிவித்தல்!

ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் நான்காயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக்க சுவர்னசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் ஆசனங்களின் எண்ணிக்கையில் 50 சதவீதமான ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.

30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி ஏற்றாதவர்கள் பஸ்ஸில் ஏற்றப்பட மாட்டார்கள். 

பஸ் வண்டியில் ஏறுபவர்களின் தேசிய அடையாள அட்டையை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source : virakesari

Back to top button