செய்திகள்

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் கூறிய விடயம்!

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களு்ககு தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button