செய்திகள்

பாடசாலை விடுமுறை : உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதி குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்காக பாடசாலைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படுமெனவும்  ஏனைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவார காலத்திற்கு  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்தோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் திகதிகள் திங்கட்கிழமை  அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button