செய்திகள்

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 10 நாட்களில் தமக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் தயவுசெய்து தங்களை கொரோனா வைரஸ்ஸூக்கான பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்த அவர் பதிவிட்டுள்ளதாவது,

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி! 1

நான் கோவிட்19 தொற்றுக்காக  பாசிட்டிவ் சோதனை செய்பட்டுள்ளேன். வைத்திசாலைக்கு மாற்றப்பட்டேன் .. வைத்திசாலை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் .. என குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின்  முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

Back to top button