செய்திகள்

பொது மக்களுக்கான தடுப்பூசி திட்டம் மார்ச் முதல்

நாட்டில் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும்  மார்ச் முதலாம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள 4000 தடுப்பூசி நிலையங்களில் இந்த தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும்.

இதற்காக தேவையான தடுப்புகளைப் பெற்றவுடன் தேசிய தடுப்பூசி செயற்திட்டத்தை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்தாகவும் அவர் கூறினார்.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்டின் 160,000 க்கும் மேற்பட்ட அளவுகளை அரசாங்கம் ஏற்கனவே முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button