செய்திகள்

மகரத்தில் அமரும் குரு, சனி, புதன்! யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா? இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து

குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் மகரத்திலும், சூரியன், சுக்கிரன் கும்பத்திலும், செவ்வாய், ராகு ரிஷப ராசியில் அமர்ந்து இந்த மாத்திற்கான பலன்களை கொடுக்க உள்ளன.

ரிஷப ராசிக்கு வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் நன்மை உண்டாகும். மிதுன ராசியினர் ஆரோக்கியத்திலும், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குரு, சனி, புதன் ஆகிய கிரகங்கள் மகரத்திலும், சூரியன், சுக்கிரன் கும்பத்திலும், செவ்வாய், ராகு ரிஷப ராசியில் அமர்ந்து இந்த மாத்திற்கான பலன்களை கொடுக்க உள்ளன.

மிதுனம்

இந்த மாதத்தில் உங்கள் ராசி நாதனான புதன் பகவான் ராசிக்கு 8ம் இடத்தில் சனி, குரு உடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இதனால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

வெளியூர் பயணங்கள் செய்யக்கூடியவர்கள் சற்று சிரமங்களைத் தாண்டி தான் பயணத்தில் வெற்றியைப் பெற முடியும். வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு வேலையில் வெளி ஆட்களால் தொந்தரவு சந்திக்க நேரிடும். வேலையில் உடன் வேலைப்பார்ப்பவர்கள் சாதகமாக நடப்பது கடினமே.

இருப்பினும் எந்த ஒரு கண்டமும் இல்லை என்பதால் பெரிய பாதிப்பு இல்லை.

சுப காரிய பேச்சு வார்த்தை நடத்தலாம். புதிதாக சுப காரிய பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால், பேச்சு வார்த்தை மட்டும் செய்யுங்கள் செயலை அடுத்த மாதத்தில் வைத்துக் கொள்வது சிறப்பு.

ஆரோக்கிய விஷயங்களைப் பொறுத்த வரை நரம்பு சார்ந்த, எலும்பு, மூட்டு சார்ந்த சிக்கல் ஏற்படலாம். இதற்கான மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மாதத்தில் சாதகம் என்றால் பிரச்சனையில் சிக்கித் தான் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

உறவுகள் சேரக்கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். வம்பு வழக்கு தீரும். நல்லுறவு மேலும் அதிகரிக்கும். வீடு, மனை போன்றவை வாங்கும் போது வில்லங்கங்களைச் சரியாக சோதித்து பின் வாங்கவும்.

ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். ராசிக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உறவினர்கள் மூலம் பிரச்னைகள் வரும் என்பதால் உறவினருடன் பழகுவதில் கவனம் தேவை.

 • அதிர்ஷ்ட எண்
 • 2, 3, 5
 • அதிர்ஷ்ட நிறம்
 • வெள்ளை, மஞ்சள்
​கடகம்

கடக ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் கேது இருக்கின்றனர். 7ம் வீட்டில் சனி, குரு, புதன், 8ல் சூரியன், சுக்கிரன் இருக்கின்றனர். இதன் காரணமாக மாதத்தின் தொடக்கத்தில் சில விஷயங்கள் நினைத்து பயம் ஏற்படக்கூடும். இருப்பினும் அந்த பயத்தை மீறி அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் செயலை செய்யத் தொடங்கும் போது வெற்றி சிறப்பாக கிடைக்கும்.

ராசிக்கு 11ல் செவ்வாய், ராகு இருப்பதால் ஒரு வகை லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அதாவது பழைய சொத்துக்கள் புதுப்பித்தல் நிகழ்வு நடக்க வாய்ப்புள்ளது. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு உகந்த மாதம்.

வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணத்திற்கான இடம் 7ல் சனி, குரு, புதன் இருப்பதால் திருமண சுப காரியத்தில் சில தடுமாற்றங்கள் ஏற்படும்.

உங்களின் ஜாதகத்தில் தசா புத்தி சிறப்பாக இருந்தால் சுப காரியங்களில் நற்பலன் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள், முயற்சிகள் வெற்றி பெறக்கூடிய சூழல் உண்டு. முயற்சிகளை கை விட வேண்டாம். குழந்தைகளின் கல்வி சார்ந்த முயற்சிகள் வெற்றி தரும்.

பெரியவர்களின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக தலை சார்ந்த தலை சுற்றல், தலை வலி உள்ளிட்ட பிரச்னைகள் தரும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

 • அதிர்ஷ்ட எண்
 • 7, 9
 • அதிர்ஷ்ட நிறம்
 • இளம் மஞ்சள், இளஞ் சிவப்பு
​சிம்மம்

தாய் வழி உறவினால் ஒரு சில நன்மைகளும், தடுமாற்றங்களும் ஏற்படும். ராசிக்கு 7ல் சனியின் வீட்டில் சூரியன், சுக்கிரன் இருப்பதால் எந்த ஒரு செயலும் நல்ல வெற்றியைக் காண ஆலோசனையும், சிந்தனையும் தேவைப்படும். குடும்ப ரகசியங்களை உங்களின் உறவினர்களிடம் சொல்வதற்கு கூட யோசித்து சொல்லுங்கள். ஏனெனில் அதுவே உங்களுக்கு பின்னாளில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.

7ல் சுக்கிரன் இருப்பதால் இந்த காலத்தில் திருமண சுப காரியம், வேலை வாய்ப்பில் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும். திருமண நிச்சயம், காதல் திருமண வாய்ப்பு தடையை தாண்டு உண்டாகலாம்.

வேலையில் உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய உகந்த மாதமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு சாதகமான லாபம் தருவதாக இருக்கும்.

வேலை விஷயமாக வெளியூர் பயணம் செய்ய உகந்த மாதம் நன்றாக இருக்கும்.

 • அதிர்ஷ்ட எண்
 • 5, 7, 9
 • அதிர்ஷ்ட நிறம்
 • நீலம், மஞ்சள்
​கன்னி

இந்த மாதம் ஆரம்பத்திலிருந்தே மிக சிறப்பான பலன்களைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். மாத இறுதியில் சற்று இழுபறியான நிலை உண்டாகலாம்.

வேலை விசயத்தில் வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சற்று சாதகமானதாக இருக்கும். வேலை மாற்றங்கள் செய்ய நினைப்பவர்கள் இருக்கும் இடத்தில் சமாளிக்க முயலவும்.

இருக்கும் சூழலை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் கஷ்டங்கள் இருந்தாலும் பெரிய பின்னடைவு தராது.

புதிய விஷயங்களை தொடங்குதல் அதாவது புதிய தொழில் தொடங்க நினைப்பதைத் தவிக்கவும்.

இந்த மாதத்தில் திருமணம் கைகூடி வர வாய்ப்பும், கணவன் மனைவி சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. வீடு, மனை வாங்க முயல்பவர்களுக்குச் சாதகமான பலன் இருக்கும்.

வீடு மேல் எழுப்ப வேலை தொடங்க சிறப்பானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று மனம் விட்டு பேசுவதால் மன பாரம் தீரும், உங்களின் செயலில் வெற்றி கிடைக்கும்.

 • அதிர்ஷ்ட எண்
 • 1, 3, 7
 • அதிர்ஷ்ட நிறம்
 • பச்சை, சிவப்பு

Back to top button