செய்திகள்

மகரத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி! அடுத்த 140 நாட்கள் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சனி பகவான் மே மாதம் 23 ஆம் திகதி பிற்பகல் 2:50 மணிக்கு மகர ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கப் போகிறார்.

இவர் அக்டோபர் 11, 2021 அன்று காலை 7:48 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி வக்ர பெயர்ச்சி நிகழ்விருப்பதால், அக்டோபர் மாதம் வரை, அதாவது 140 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எம்மாதிரியான பலன்களைத் தரப்போகிறார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, சளி, இருமல் மற்றும் தொண்டை பிரச்சனையால் அவ்வப்போது பாதிக்கப்படலாம். சனி வக்ர நிலையில் இருப்பதால், பெண்கள் முதுகு வலி பிரச்சனையால் பாதிக்கப்படலாம்.

மேலும் வயதானவர்கள் கால் வலியால் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சு, நடத்தை மற்றும் நடைமுறை வாழ்க்கையில் சிற மாற்றங்களைக் காணலாம். பேச்சையும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உறவுகளும் பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு இக்காலம் நல்ல காலமாக இருக்கும். வெளிநாட்டு பயணம் சாத்தியமாகலாம். இந்த காலம் அரசாங்க வேலைகளில் உள்ளவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

பயணத்தைப் பொறுத்தவரை, இது ஒரு நல்ல நேரமாக இருக்கும் மற்றும் பயணம் உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். காதலிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். புதிய நண்பர்களை உருவாக்கலாம் மற்றும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை, இக்காலத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உங்கள் உடல்நலத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் இக்காலத்தில் எலும்பு வலி, தலைவலி மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

அரசுத் தேர்வுகள் அல்லது கல்வித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்கு வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இது சாதகமான நேரமாக இருக்கலாம்.

இக்காலத்தில் சில புதிய முதலீடுகள் சாத்தியமாகலாம். அரசியலில் ஈடுபடுபவர்கள், தங்களைப் பற்றியும் எடுக்கும் முடிவுகள் குறித்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசர முடிவு எதிர்காலத்தில் சிக்கலுக்கு வழிவகுக்கும்.

புதிய வேலைகளைத் தேடுபவர்கள் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், பயணத்திற்கான வாய்ப்புகள் ஓரளவு இருக்கும். இக்காலத்தில் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களைப் பொறுத்தரை, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறந்ததாக இருக்கும். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் குணமடையக்கூடும். ஆனால் பிபி, சர்க்கரைநோய் இருப்பவர்கள், தங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். 15 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில் சிக்கல்களை சந்திக்கக்கூடும்.

ஜூலை மாதத்திற்குப் பிறகு உடல்நலம் குறித்த நேர்மறையான விஷயங்களை நீங்கள் காணலாம். இந்த காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். உணர் படிப்பு படிக்க விரும்பினால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.

மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களாக இருக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் புதிய முதலீடுகளைச் செய்யலாம். அவர்களின் வணிகங்களையும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு பெறலாம்.

யாத்திரை செல்வது பற்றி யோசிப்பவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம். இக்காலத்தில் திருமணமாகாதவர்களுக்கு ஒரு காதல் உறவு மலரக்கூடும், மேலும் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, ஆரோக்கியம் ஓரளவாக இருக்கும். ஆறாவது வீட்டின் அதிபதி எட்டாவது இடத்தில் இருப்பதால், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

எனவே உங்கள் உணவில் எச்சரிக்கையாக இருங்கள். வயதானவர்கள் மூட்டு வலியை அனுபவிக்கலாம். இந்த காலத்தில் மாணவர்களுக்கு கண் பிரச்சனைகள் ஏற்படலாம். படிப்பில் சிறப்பான முடிவைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலம் நிதி தொடர்பான விஷயங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.

ஒரு புதிய வீட்டை வாங்க அல்லது பழைய வீட்டை விற்று முதலீடு செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலம் மிதமானதாக இருக்கலாம்.

குறுகிய கால முதலீட்டின் நன்மைகள் லேசானதாக இருக்கலாம், அதேசமயம் நீண்ட கால முதலீடு லாபகரமானதாக இருக்கும். இந்த காலம் காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்காது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும் லேசான தலைவலி, வாய்வு மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளால் அவ்வப்போது பாதிக்கப்படலாம். வலுவான மனநிலையையும் பிடிவாதத்தையும் சற்று விலக்கி வைத்திருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சிறந்த வேலை அல்லது புதிய வேலையைத் தேடுபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

முக்கியமாக வாழ்க்கை துணையைத் தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நவம்பர் வரையிலான காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமானதாக இருக்கும். இக்காலத்தில் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்வில் வரக்கூடும். தாய்-மகன் உறவு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மிதமானதாக இருக்கும். இக்காலத்தில் வயிறு தொடர்பான நோய்கள், பித்தக்கல் சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் செரிமானம் தொடர்பான நோய்களை சந்திக்கலாம். எனவே இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் வீட்டு உணவுகளை உண்பதே நல்லது.

மாணவர்களுக்கு இது சாதகமான காலம். மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர் வெற்றி காணலாம். சில முக்கியமான முடிவுகளை எடுக்க குடும்ப உறுப்பினர்கள் அல்லது நிபுணர்களை அணுகவும்

. கலைஞர்கள் தங்கள் கலையை மேம்படுத்தும் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். மேலும் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளுக்கு இது சாதகமான நேரம்.

சொத்து தொடர்பான பிரச்சினைகள் மே முதல் ஜூலை-க்குள் தீர்க்கப்படலாம். தங்களின் எதிர்காலம் குறித்து அக்கறை கொண்டவர்கள், இக்காலத்தில் தங்கள் வாழ்க்கையில் வளர நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். காதல் உறவுகளுக்கு சாதகமான காலம் இது.

உங்கள் உங்கள் உள்ளுணர்வுகளையும் எண்ணங்களையும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் நேர்மறை பதிலைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் தாயுடனான உறவு மேம்படும். மேலும் நீங்கள் ஆன்மீகவாதிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் யாத்திரைகளை அல்லது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் உங்கள் கடன்களை நீங்கள் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்கள் சிறந்த இராஜதந்திர அணுகுமுறை மற்றும் நிர்வாக திறன்களால் உங்கள் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.

உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றாலும், இதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும், ஆனால் இது உங்களுக்கு தொடர்ச்சியான சில தடைகளை உருவாக்கக்கூடும்.

ஆன்மீக எழுத்துத் துறையில் ஈடுபடும் நபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல விளைவுகளைப் பெறலாம். உங்கள் ஆளுமையும் மேம்படும். இதன் காரணமாக, நீங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் முயற்சிகள் மற்றும் தகவல்தொடர்புகளில் பின்னடைவைப் பெறுவார்கள். இருப்பினும் இந்த பின்னடைவு உங்களை அதிகம் பாதிக்காது.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்கள் முதலாளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் நீங்கள் நல்லுறவைக் கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் அது அவர்களுடன் சில வேறுபாடுகளை உருவாக்கக்கூடும்.

இக்காலம் உங்கள் பணத்தை எங்காவது முதலீடு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இக்காலத்தில் சொத்து மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் உண்டு. சொத்தை விற்க ஆர்வமுள்ளவர்கள் நல்ல லாபங்களைக் காணலாம். காதலிப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்காது மற்றும் பிரிவினை உருவாக்கக்கூடும்.

 இந்த காலத்தில் வெளிநாட்டு மூலங்களில் இருந்து லாபங்கள் கிடைக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் உங்கள் உடன்பிறப்புகளுடன் எந்தவொரு சண்டையிலும் ஈடுபடுவதில் கவனமாக இருங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிக்க இது ஒரு நல்ல காலமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் நிர்வாக திறன்கள் மேம்படும். மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களின் ஞானம் உங்களுக்கு உதவும்.

உங்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கலாம், ஆனால் நீங்கள் திருப்தி அடையாத சூழலும் ஏற்படக்கூடும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் மாமியாருடன் எந்தவொரு வாதத்தையும் தவிர்க்கவும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தாழ்மையுடன் இருங்கள்.

வருமானம் மற்றும் ஆதாயங்கள் சீராக இருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளும் லட்சியங்களும் மிக அதிகமாக இருக்கும். எனவே உங்கள் எதிர்பார்ப்புகளில் சிலவற்றை கைவிட்டு, இந்த காலகட்டத்தில் சோம்பலாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல காலமாக இருக்கும். சனி உங்கள் உயர்வுக்கு பிற்போக்குத்தனமாக மாறும் என்பதால், இக்காலத்தில் உங்களை கூடுதல் முயற்சிகளில் ஈடுபட வைக்கும்.

இது எந்தவொரு குறிப்பிட்ட பணியிலும் உங்களை முழுமையாக்க உதவும். இக்காலத்தில் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். சில சமயங்களல் இது உங்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கும்.

உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் மனைவியால் விரும்பப்படாத பணியை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்.

இல்லையெனில் உங்களுக்குள் சில இடையூறுகளை உருவாக்கக்கூடும். உங்கள் தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும் மற்றும் வெளிநாட்டு மூலங்களில் இருந்தும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நிலம் மற்றும் செலவுகளில் சனி பிற்போக்குத்தனமாக இருப்பதால், இக்காலத்தில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். சட்ட நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் இக்காலத்தில் மீண்டும் தடைகளை சந்திக்கலாம்.

இந்த காலகட்டத்தில் எதிரிகள் மேன்மையடைவார்கள். இருப்பினும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு, இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் நிதிகளை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் பின்னடைவின் போது நிறைய செலவுகள் ஏற்படலாம். இக்காலத்தில் உங்கள் பணத்தை சேமிக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ள யாருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

உங்கள் முதலாளிகள், வழிகாட்டி அல்லது தந்தையுடனான உறவுகள் கடுமையானதாக மாறக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில் எந்தவிதமான பிரச்சனைகளையும் உருவாக்குவதைத் தவிர்த்திடுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் வருமானம் மற்றும் ஆதாயங்களில் சனி பிற்போக்குத்தனமாக மாறுவதால், உங்கள் வருவாயில் சிக்கல்களை உருவாக்கக்கூடும். நீங்கள் முன்பு பெறும் அதே தொகையைப் பெற கூடுதல் முயற்சிகள் அல்லது கடின உழைப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.

இக்காலம் புதிய முதலீடுகளுக்கான சாதகமான காலம் அல்ல. இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் அறிவார்ந்தவராக இருப்பீர்கள். இக்காலத்தில் உங்கள் ஞானத்தையும் நிர்வாக திறன்களையும் தவறாமல் பயன்படுத்துங்கள்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்திருங்கள். வெளிநாட்டு மூலங்கள் மூலம் கிடைக்கும் ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல செய்தியைப் பெறலாம்.

Back to top button