செய்திகள்

மஹர சிறைக்கைதிகளின் உயிரிழப்பு தொடர்பில் வெளியானது அதிர்ச்சித் தகவல்!

கடந்த நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் 11 கைதிகளும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.

சிறை வளாகத்தில் அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவினராலேயே இந்த தகவல் இன்று நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

எட்டு கைதிகள் மாத்திரம் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட நிலையிலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இதேவளை உயிரிழந்த கைதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகள் மூவரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் வத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

Source
virakesari
Back to top button