செய்திகள்

மார்ச் 11 இல் இடம் பெயரும் மூன்று சக்திவாய்ந்த கிரகங்களால் இந்த 6 ராசிக்கும் ஏற்பட போகும் விபரீத பேரதிர்ஷ்டம்! யாருக்கு பேராபத்து?

2021 ஆம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு பின், மார்ச் மாதத்தில் மூன்று கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன.

அதில் இந்த மாதம் சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது.

அதே சமயம் புதனும், சுக்கிரனும் தனது சொந்த ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகின்றன.

சூரியனின் இடமாற்றத்துடன், மற்ற 2 கிரகங்களும் இடம் பெயர்வதால், இந்த மாதம் 12 ராசிகளும் எம்மாதிரியான பலன்களைப் பெற போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மாத தொடக்கத்தில் உங்களின் பொறுமை குறையக்கூடும். பேசும் போது சமநிலையைப் பேணுங்கள். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மார்ச் 11 ஆம் தேதிக்கு பிறகு வேலை மாற்ற வாய்ப்புக்களைப் பெறலாம். உயர் பதவியைப் பெறலாம். ஆனால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரருக்கு மாத தொடக்கத்தில் ஒவ்வொரு கணமும் இன்பாக இருக்கும். வேலையில் உயர் பதவிக்கான வாய்ப்புக்களைக் காணலாம். உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வி மற்றும் அறிவுசார் பணிகளில் வெற்றி காண்பீர்கள். மனநிறைவுடன் இருங்கள். மார்ச் 11 ஆம் தேதிக்கு பிறகு, ஒரு நண்பரின் உதவியுடன் உங்களின் வருமானம் அதிகரிக்கலாம்.

மிதுனம்

மார்ச் 10 ஆம் தேதி வரை, மனக் கலக்கத்துடன் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை ஒழுங்கற்றதாக இருக்கும். வியாபாரத்தில் சிக்கல்களை சந்திக்கலாம். ஆனால் மார்ச் 11 ஆம் தேதியில் இருந்து விஷயங்கள் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து உங்களுக்கு ஆதரவு கிட்டும். மரியாதை அதிகரிக்கும். மார்ச் 17 ஆம் தேதியில் இருந்து வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை அதிகரிக்கலாம். துணி வாங்குவதற்கு நிறைய பணத்தை செலவழிப்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மன அமைதியுடன் இருப்பீர்கள். படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் வெற்றி பெறுவீர்கள். மரியாதை அதிகரிக்கும். மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு, வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து, நிதி நிலைமை மேம்படும். ஆனால் கடின உழைப்பு அதிகமாக இருக்கும். மார்ச் 17 ஆம் தேதியில் இருந்து தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், மாத தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து, நம்பிக்கையின்மை அதிகரிக்கும். அதிகளவிலான கோபத்தைத் தவிர்க்க அமைதியாக இருங்கள். மார்ச் 12 ஆம் தேதியில் இருந்து, வருமானம் மேம்படும். வியாபாராத்தில் லாபகரமான வாய்ப்புக்கள் கிடைக்கும். மார்ச் 17 ஆம் தேதிக்கு பின் தந்தையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் பல இடையூறுகள் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, மாத தொடக்கத்தில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு, மனக்கலக்கத்துடன் இருப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மார்ச் 17 ஆம் தேதியில் இருந்து வேலை நிலைமை மேம்படும். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து செலவுகள் குறைவாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவித்திடுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணிடமிருந்து பணத்தைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரருக்கு, மாத தொடக்கத்தில் நம்பிக்கை அதிகமாக இருக்கும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லாம். தந்தையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து வருமான சிக்கல்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். மார்ச் 17 ஆம் தேதியில் இருந்து மனம் கலக்கத்துடன் இருக்கும். வணிக நிலைமைகள் வலுவாக இருக்கும். அதே சமயம் அதை விரிவாக்குவதற்கான செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மாத தொடர்க்கத்தில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உங்களின் நோக்கம் விரிவடையும். மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு, பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். மார்ச் 17 ஆம் தேதிக்கு பிறகு, ஆடைகளை பரிசாக பெறுவீர்கள். மேலும் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் மனம் அமைதியற்றதாக இருக்கும். நம்பிக்கையின்மையுடன் இருப்பார்கள். மார்ச் 12 ஆம் தேதியில் இருந்து வணிக நிலைமை மேம்படும். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து, குடும்பத்தில் வீணான விவாதங்களைத் தவிர்க்கவும். மார்ச் 17 ஆம் தேதிக்கு பிறகு, உங்களின் நண்பரை சந்திப்பீர்கள். மேலும் உங்களின் வருமானம் மேம்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தாலும், சோம்பேறித்தனமும் இருக்கும். வணிக நிலைமைகள் மேம்படும். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து, வியாபாரத்தில் சற்று அதிகமான உழைப்பு இருக்கும். மூதாதையர் சொத்தில் இருந்து பணத்தைப் பெறலாம். உடன்பிறப்புகளுடனான உறவு மேம்படும். ஒரு நண்பரிடமிருந்து புதிய வணிகம் தொடங்குவதற்கான முன்மொழிவைப் பெறலாம். இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் நிறுத்தப்பட்ட வேலைகள் நிறைவடையும்.

கும்பம்

மாத தொடக்கத்தில் கும்ப ராசிக்காரர்கள் மன நிறைவுடன் இருப்பார்கள். உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். மார்ச் 12 ஆம் தேதியில் இருந்து, உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வணிகத்தில் வேகம் அதிகரிக்கும். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து உரையாடலில் சமநிலையுடன் இருங்கள். உங்கள் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மார்ச் 17 ஆம் தேதிக்கு பிறகு, தாயிடமிருந்து நீங்கள் பணத்தைப் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்கு மாத தொடக்கம் மன அமைதியுடன் இருக்கும். ஆனால் அதிகப்படியான செலவுகளால் வருத்தப்படுவீர்கள். மார்ச் 12 ஆம் தேதியில் இருந்து, குடும்ப பிரச்சனைகள் பெரும் தொந்தரவாக இருக்கலாம். மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து பொறுமை குறையக்கூடும். குடும்பத்தில் பரஸ்பர விவாதத்தைத் தவிர்க்கவும். மார்ச் 17 ஆம் தேதியில் இருந்து அலுவலக வேலை மேம்படும்.

Back to top button