செய்திகள்
முகக்கவசங்களையும் கொரோனா பரிசோதனை உபகரணங்களையும் இலங்கைக்கு வழங்கியது சீனா
இலங்கைக்கான சீனப் பதில் தூதூவர் ஹூ வே நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது 10,000 என் – 95 முகக்கவசங்கள் உள்ளடங்கலாக ஒரு இலட்சம் முகக்கவசங்களையும், கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்கள் 20 ஆயிரத்தையும் சீனத்தூதுவர் சுகாதார அமைச்சரிடம் நன்கொடையாக கையளித்தார்.
மேலும் இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஒரு இலட்சம் சுய பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுத்தருமாறு ஹூ வேயிடம் கோரிக்கை விடுத்தார்.