முதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன்- முத்தையா முரளிதரன். “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ…
இன்று இடம்பெற்ற “விழுதுகள்” நிகழ்ச்சியில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கலந்துக்கொண்டார்.
இதன்போது, தான் இலங்கையை பௌத்த நாடு என்று ஒருமுறை தெரிவித்ததன் காரணமாக தற்போது தனக்கு தமிழ் தெரியாது என்று சிலர் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
முதலில் நான் இலங்கையன் அதற்கு பின்புதான் தமிழன் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இளைஞர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டில் பிரகாசிக்க முடியாமல் போவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி, அவர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணமெனவும் முரளி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, மலையகத்தை சுற்றுலா வலயமாக மாற்றவும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் உறுதியளித்ததாகவும் முரளி தெரிவித்தார்.
இன்றைய “விழுதுகள்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ…
Sources : – Hiru news