செய்திகள்

முல்லைத்தீவு விபத்து: 3 பேரின் சடலங்கள் மீட்பு! (காணொளி)

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தில் நேற்று மாலை விழுந்து விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல் போய் இருந்த 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மல்லாவி காவற்துறையினர் இந்தத் தகவலை எமது சேவைக்கு வழங்கினர்.

விபத்தை அடுத்து காணாமல் போன 12 வயதான சிறுமியின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.

பின்னர் மேற்கொண்ட தேடுதலில் 2 வயதான சிறுமியின் சடலமும், குறித்த வாகனத்தின் சாரதியின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயும் நிலையில் அணைக்கட்டு வழியாக கப் ரக வாகனம் பயணித்த வேளையில் அது விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source : Hiru news

Back to top button