செய்திகள்

மொரட்டுவ துப்பாக்கி சூடு ; மூன்று பொலிஸார் பணி நீக்கம்

மொரட்டுவ, லுனாவ பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்குலான பொலிஸ் பிரிவுடன் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜன்ட் உட்பட இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரிகளை பணி நீக்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாகவே இவ்வாறு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரின் கடமைகளுக்கு  இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட  முச்சக்கர வண்டியில் பயணித்த  இருவர் மீது பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ  லுனாவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை  சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்தவரின் சடலத்துக்கான பிரேத பரிசோதனைகள் களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Back to top button