செய்திகள்

மேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு?..

கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து பல கோடி பேர் மீண்டுள்ளனர்.

2021ஆம் ஆண்டிலாவது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பார்களா? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிறக்கப் போகும் புத்தாண்டிலாவது நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

புத்தாண்டு பலன் சொல்லும் போது நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்க்க வேண்டும். ஆண்டு கோள்கள் குரு, சனி, ராகு கேதுவின் சஞ்சாரம் எந்த ராசியில் இருக்கிறது என்று பார்த்து அந்த கிரகங்களின் சேர்க்கை பார்வை எப்படி இருக்கிறது எந்த ராசிக்கு கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி 17ஆம் தேதி பிறக்கிறது. மேஷம் ராசியில் செவ்வாய், ரிஷபம் ராசியில் ராகு, சந்திரன் கடகம் ராசியிலும் விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், பண வரவையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, பிறக்கப் போகும் ஆங்கில புத்தாண்டில் உங்களுடைய ராசிக்கு அமோகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. ராகு இரண்டாம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றன.

மோட்டார் வாகனப்போக்குவரத்து திணைக்கள செயற்பாடுகள் மீள ஆரம்பம் – முற்பதிவுகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் !

குரு சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். வேலையில் சின்னச்சின்ன குடைச்சல்கள் இருந்தாலும் சமாளித்து வேலையை தொடர்ப்பாருங்கள். புதிய வேலை மாற நினைக்கக் கூடாது. தொழில் முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்ய நினைக்க வேண்டாம்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நிறைய நன்மைக நடைபெறும். இந்த ஆண்டு மேஷம் ராசிக்காரர்கள் கால பைரவரை வணங்க வேண்டும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கி வர பாதிப்புகள் நீங்கும். கடன் பிரச்சினை குறையும்.

ரிஷபம்

சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசிக்குள் ராகு, ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

உங்களுடைய ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் நிறைய தன வரவு இருக்கும். கடன் பிரச்சினையை சமாளிப்பீர்கள். காதல் மலரும் காலம் என்பதால் எதையும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். ஒவ்வொரு செயலையும் நிதானமாக செய்வது அவசியம்.

திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். ராகு பகவானை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை புற்றுக்கு பால் ஊற்றுங்கள். துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றனர். 12ஆம் வீட்டில் ராகுவும், ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். பணம் விசயத்தில் கவனம் தேவை.

கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்த முடிவு எடுக்கும் முன்பாகவும் அனுமனை வழிபடவும். வேலையில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அமாவாசை நாட்களில் முதியவர்களுக்கு தயிர்சாதம் அன்னதானம் செய்வது நல்லது.

கடகம்

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2021ஆம் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சனியும் குருவும் ஏழாம் வீட்டிலும் ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். பிறக்கப் போகும் புத்தாண்டு சுபமான ஆண்டாக அமைந்துள்ளது.

நிறைய நல்ல காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். வீட்டில் திருமணம் சுப காரியங்கள் நடைபெறும். இந்த ஆண்டு நீங்கள் குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வணங்கலாம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வணங்கி வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்! யார் அவர்கள் தெரியுமா?
சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் சனியும் குருவும் இணைந்து சஞ்சரிக்கின்றன. பத்தாம் வீட்டில் ராகு நான்காம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் பண வருமானம் நிறைவாக இருக்கும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இந்த ஆண்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் தேவை. நோய்கள் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

பேச்சில் நிதானமும் விட்டுக்கொடுத்தலும் அவசியம். எதையும் முகத்திற்கு நேராக வெளிப்படையாக பேசி கெட்டப்பெயர் வாங்கிக்கொள்ள வேண்டாம். நீங்கள் வியாழக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்வது நல்லது. நோய்கள் நீங்க வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்வந்திரி பகவானை வணங்கலாம்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு இந்த ஆண்டு முழுவதும் ராகு ஒன்பதாம் வீட்டிலும் கேது மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிப்பார். குருவும் சனியும் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர்.

2021 ஆண்டு அற்புதங்கள் நிகழ்த்தப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. குருவினால் உங்க ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குழந்தைகளினால் பெருமை கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம். திருப்பதி ஏழுமலையானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே , 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நான்காம் வீட்டில் குரு, சனி, இரண்டாம் வீட்டில் கேது எட்டாம் வீட்டில் ராகு என முக்கிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே உங்களுடைய ராசிக்கு அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த ஆண்டு வீடு, மனை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்கலாம். சுகங்கள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். பேச்சில் நிதானம் தேவை. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சக்தி பீடங்களுக்கு சென்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடலாம்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே 2021ஆம் உங்களுடைய ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மூன்றாம் வீட்டில் குரு, சனி, ராசிக்குள் கேது ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய ஆன்மீக பயணம் செய்யலாம்.

மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கோவில் கும்பாபிஷேம் உள்ளிட்ட தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரதோஷ காலங்களில் சிவபெருமானை சென்று வணங்குங்கள். அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்! யார் அவர்கள் தெரியுமா?

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனியும், குருவும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது, 6ஆம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளதால் ஜென்ம குரு, ஜென்ம சனி விலகி விட்டது. திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும், புதிய வேலை கிடைக்கும். பண வருமானம் அமோகமாக இருக்கும்.

சிக்கனமாக செலவு செய்யவும். நேரத்திற்கு எந்த செயலையும் சரியாக செய்யவும். பிறக்கப் போகும் புத்தாண்டு உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப் போகிறது. மாணவர்களுக்கு மகிழ்சிகரமான ஆண்டாகும், பெண்களுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஆண்டாகவும் அமையும். விநாயகப்பெருமானை வழிபடவும்.

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்குள் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேதுவும் ஐந்தாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன.

இந்த புத்தாண்டில் உங்களுக்கு ஜென்ம ராசியில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குரு, சனி பார்வையும் சாதகமாக உள்ளது.

மன நிம்மதிக்காக நீங்கள் சனிபகவானை வணங்கி விளக்கேற்றுங்கள். அம்மன் கோவில்களில் பச்சரிசி தானம் செய்வது நல்லது.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு பத்தாம் வீட்டில் கேதுவும் நான்காம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன.

விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய வருமானமும் அதுபோல சுப விரைய செலவுகளும் ஏற்படும். வீடு, சொத்துக்கள் வாங்கலாம். வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். நல்ல விசயங்களுக்கு பணத்தை செலவு செய்யலாம்.

சிவ ஆலயங்களுக்கு சனிக்கிழமை சென்று வழிபடலாம். ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி வில்வ அர்ச்சனை செய்வது நல்லது.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, 2021ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றன. ராசிக்கு ஒன்பதால் வீட்டில் கேதுவும், மூன்றாம் வீட்டில் ராகுவும் சஞ்சரிக்கின்றன.

கொரோனா காலத்திலும் கோடீஸ்வரன் ஆகும் யோகம் உங்களுக்கு கை கூடி வந்துள்ளது. நவ கிரகங்களும் உங்களுடைய ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறும்.

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குபேரனாகும் யோகம் வந்துள்ளதால் வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது.

Back to top button