செய்திகள்

யாருக்கு அஷ்டமத்து சனியால் ஆபத்து? இந்த இரண்டு ராசிகளில் பிறந்தவர்களுக்கு கடவுள் அருள் தேடி வரும்!

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் சுகமும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது.

குல தெய்வ அருள் வீடு தேடி வரும் மாதம். உங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கவலைகள் நீங்கி மனதில் நிம்மதி ஏற்படும் மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது.

நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி, பார்வையைப் பொறுத்து இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.  

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மாத முற்பகுதியில் அதிர்ஷ்டமும் அறிவும் இணைந்த யோகம் கை கூடி வந்துள்ளது. மூன்றாமிடத்தில் சூரியன் ஆட்சி பெற்றிருக்கிறார்.

நான்காம் வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றிருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதிக்கு மேல் சுக்கிமூலத்திரிகோண சுக்கிரன் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். சனி எட்டாம் வீட்டில் இருந்தாலும் தடை தாமதங்கள் தகர்த்து எறியப்படும்.

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பிரச்சினை ஏற்படும் போது காப்பாற்றுவதற்கு கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார். மூன்றுக்கு அதிபதி மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் பயம் நீங்கி மனோ தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தகப்பன் வழி உறவினர்கள் உதவி செய்வார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும். தொட்டது துலங்கப்போகிறது. ராசி அதிபதி புதன் ஆட்சி உச்சம், மூலத்திரிகோணம் பெறுவது அற்புதமான காலகட்டமாக உள்ளது.

அலுவலகத்தில் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புது வேலைக்கு அப்ளை செய்யலாம், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இடமாற்றம் வெற்றிகரமாக ஏற்படும். உங்களை வாட்டி வதைத்த அத்தனை பிரச்சினைகளில் இருந்தும் விடுபடப்போகிறீர்கள்.

நல்ல பண வருமானம் கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது வீடு வாங்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறும்.

சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்கு வருவதால் பிள்ளைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண் தொழில் முனைவோர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். திருமணம் செய்து பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மாணவர்களுக்கு மன அமைதியும் தெளிவும் ஏற்படும்.

அஷ்டமத்து சனி இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் போது மாற்றங்கள் வரலாம். புத்திரபாக்கியம் கை கூடி வரும். குல தெய்வ அருள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் தேடி வரும்.நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர பெருமாளை வணங்க நன்மையே நடைபெறும். பிரதோஷ நாளில் சிவ பெருமானை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த மாதம் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியனும் செவ்வாயும் இணைந்து மாத முற்பகுதியில் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும்.

அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு மாத பிற்பகுதியில் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கடந்த சில மாதங்களாக வேலையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்

. பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வீடு மாற்றம் ஏற்படும். வீடு வாங்குவதற்கு லோன் கிடைக்கும்.

திருமண பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வண்டி வாகனம் வாங்கலாம். கண்ட சனியால் ஏற்பட்ட சங்கடங்களை குரு போக்குவார்.

குரு சனி கூட்டணி, சுக்கிரன் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று மாளவியா யோகத்துடன் இருக்கிறார். திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. புதிதாக காதல் உருவாகும். பிரிந்த காதலர்கள் கூட ஒன்று சேர்ந்து திருமணம் முடிய யோகம் கை கூடி வரும். புத்திரபாக்கியம் வரும்.

வேலையில் இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். திறமை பளிச்சிடும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

படிப்பிற்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். சந்திராஷ்டம காலத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்த்து விடுங்கள். பெண்கள் நினைத்தவை நிறைவேறும் விரும்பிய வாழ்க்கை கை கூடி வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். இந்த மாதம் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் தேடி வரும் மாதமாகும். 

Back to top button