செய்திகள்

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி நபரின் உடல்நிலையில் முன்னேற்றம் – வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அவரது உடல்நிலையில் தொடர்பில் நேற்று இரவு தொலைபேசியின்  ஊடாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை பணிப்பாளருடன் உரையாடியிருந்தேன்.

தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர், இன்று உடல்நிலை தேறி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்  இன்னும் சில நாட்கள் அல்லது வாரத்தின் பின்னர் வீடு திரும்புவார்” என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச்  22ஆம் திகதி தாவடியைச் சேர்ந்த குடும்பத் தலைவருக்கு கோரனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில் 15 நாள்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button