செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.
அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களுக்கு உதவியாளர்களாக நிற்பவர்களது நிலை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sources : Tamilwin