செய்திகள்

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது.

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்  கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததோடு நாளைய தினத்தில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ் கல்வி வலய பாடசாலைகளை தற்போதுள்ள இடர் காலத்தை கருத்தில்கொண்டு பாடசாலைச் செயற்பாடுகளை இடை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Back to top button