வங்கக்கடலில் உருவாகிறது “அம்பான் ” : நாட்டில் இடியுடன் கூடிய மழை தொடரும் சாத்தியம் !
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.
அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இவ்வாறு வங்கக் கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவெடுக்கின்ற நிலையில், இந்த புயலுக்கு தாய்லாந்து வழங்கியுள்ள ‘அம்பான்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது.
அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பிராந்திய அந்தமான் கடற்பிராந்தியத்தில் உறுவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாளான பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையுமென வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியிலும்இ அந்தமான் கடற்பிராந்தியத்தில் தென் பகுதியில் இணைந்துள்ள கடற்பிரதேசத்தில் உருவாகியிருக்கும் தாழமுக்க பிரதேசம் தொடர்நிலைக் கொண்டுள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திரையினுடாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.
தாழமுக்க பிரதேசத்தின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக தென் மேற்கு பிராந்தியத்தில் இன்றுமுதல் சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும்.இதனால் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை எதிர்பார்க்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.