செய்திகள்

வாழ்வில் துன்பம் விலகி மகிழ்ச்சி உண்டாக.. 12 ராசியினர்களும் இந்த 1 வரி மந்திரத்தை உச்சரியுங்கள்!

2 ராசிக்குமான உரிய ஒரு வரி மந்திரங்களை உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்களை பற்றி தெரிந்துகொள்வோம்..

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் தொடர் போராட்டங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு இருப்பார்கள்.

மேலும், எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமான முடிவு எடுக்க பழகிக் கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கு நீங்கள் சிவனுக்கு உரிய மந்திரமான ‘ஓம் நமசிவாய’ என்னும் இந்த ஒரு வரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஒரு பிரச்சினை போனால் இன்னொரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது புலம்பி கொண்டிருப்பவர்கள் ஆக இருப்பார்கள்.

உங்கள் ராசிக்கு உச்சரிக்கும் மந்திரம் . ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் முதல் பாதியில் துன்பங்களை அனுபவித்தாலும் அடுத்த பாதியில் இன்பங்களை அனுபவிப்பவர்கள்.

நீங்கள் தினமும் உச்சரிக்க வேண்டிய ஒருவரி மந்திரம்: ‘ஓம் கம் கணபதயே நம’.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து இருந்தாலும் அதிலிருந்து பல பாடங்களை கற்றுக் கொள்வீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய ஒரு வரி மந்திரம்: ‘சிவாய நம’ ஆகும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கு நீங்கள் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய மந்திரம் ‘ஓம் பைரவாய நமஹ’.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு தொடர்ந்து இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்.

சரவணபவ ஓம்’ என்னும் இந்த முருகனுடைய சக்தி வாய்ந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் உங்களுடைய ராசிக்கு நீங்கள் நல்ல ஒரு முன்னேற்றத்தை காணலாம்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக ஏங்கி இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

உங்கள் ராசிக்கு தொடர்ந்து ‘ஓம் சக்தியே பராசக்தியே!’ என்கிற அம்பாளுடைய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் எதிலும் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எதிலும் தான் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

உங்கள் ராசிக்கு நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு காலதாமதமான பலன் கிடைத்தாலும் அமோகமான வெற்றியுடன் வாகை சூடுவீர்கள்.

உங்கள் ராசிக்கு நீங்கள் வெற்றிக்கனியை ருசிக்க தினமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ‘ஓம் முருகா ஓம்’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் நேர்வழியில் சாதிக்க வேண்டும் நினைப்பீர்கள்.

உங்களுக்கான இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரிக்க நல்ல பலன் கிடைக்கும், ‘ஸ்ரீ ராம ஜெயம்’.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் சிறுவயது முதலே துன்பத்தை அனுபவித்து வந்தாலும் இறுதி காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கை அமைதியாக மாற இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரிக்கலாம். ‘ஓம் பிரத்யங்கரா போற்றி’.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப் படுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து சுயநலம் பாராமல் நீங்கள் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

உங்களுக்கு முன்னேற்றம் உண்டாக இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள்.

உங்களுக்கான ஒரு வரி மந்திரம்: ‘ஓம் மஹா புருஷாய வித்மஹே

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் உங்களை நம்பி அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

உங்களை எதிர்க்கும் எதிரிகளை பற்றி சிறிதும் கவலை கொள்ள மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய

எனும் இந்த ஒரு வரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உச்சரியுங்கள்.

Back to top button