செய்திகள்
அரிசி விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கமநல அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நெல் அறுவடை அண்மித்துள்ள வேளையில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிவித்த அமைச்சர் அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள நெல்லை சிறு அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கி அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
sources : virakesari.lk