கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இந்த நிலைமையை உணரும் நபர்கள் பாதிப்புகள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மேலும் 2 – 3 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக கொழும்பு வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூசு துகள்களின் அதிகரிப்பு காரணமாக இருமல், தடுமல், சளி போன்ற நோய் நிலைமைகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக ரயில் பாதையில் கலகொட மற்றும் வட்டவளைக்கு இடையில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் சாரதிகளின் திறமை காரணமாக இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில், கல்பொட ரயில் நிலையத்தை கடந்து வட்டவளை நோக்கி பயணித்த போது, வைஸ்ராய் நிலக்கரி நீராவி ரயில் வட்டவளையில் இருந்து கல்பொட நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது குறித்த இரண்டு ரயில்களையும் 10 அடி தூரத்தில் வைத்து நிறுத்துவதற்கு ரயில் சாரதிகள் கடுமையாக போராடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் வைஸ்ராய் நிலக்கரி நீராவி ரயிலில் 12 நாடுகளை சேர்ந்த பெருமளவு சுற்றுலா பயணிகள் பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Sources : https://www.tamilwin.com/security/01/238488