சுவாரஷ்யங்களை கொண்டுள்ள ஜனாதிபதி தேர்தல் !
இன்று (16.11.2019 )சனிக்கிழமை நடைபெறவுள்ள நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் பல முக்கிய சுவாரஷ்ய அம்சங்கள் பதிவாகியுள்ளன.
மிக முக்கியமாக இம்முறைதேர்தலிலேயே கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதாவது 35 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அதேபோன்று இம்முறை தேர்தலில் பதவியில் உள்ள ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடவில்லை என்பதும் முக்கியமாக அம்சமாகவுள்ளது.
மேலும் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுவதனால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளமானதாக அமைந்துள்ளது. இதுவே இலங்கையின் தேர்தல் வரலாற்றில் கூடிய நீளமான வாக்குச் சீட்டாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக இம்முறை வாக்களிப்பு நேரம் 10 மணிநேரமாக அதிகரித்துள்ளது.
வழமையாக தேர்தல் நாட்களில் காலை 7 மணிலியிருந்து மாலை 4 மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும். ஆனால் இம்முறை காலை 7 மணி முதல் மாலை ஐந்து மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.