செய்திகள்

இலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்னும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை.

எனினும், மொத்தம் பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷ 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.

எனினும், தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.

சஜித் அறிக்கை

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்.

விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே சஜித் பிரேமதாஸ இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸபடத்தின் காப்புரிமை SAJITH PREMADASA/TWITTER

தான் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக எதிர்கொண்ட தோல்வியை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களுக்கும் சஜித் பிரேமதாஸ இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாகவும், நீதியானதுமான தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் தான் விரைவில் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகும் அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள பின்னணியில், அந்தக் கட்சியைச் சேர்ந்த இலங்கை தொலைத் தொடர்புத் துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ மக்கள் தீர்ப்பை மதித்து தாம் தமது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தம்மை இதுவரை ஆதரித்துவந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “இதுவரை செய்யப்பட்ட நல்ல பணிகள் தொடரும்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அமைதியாக கொண்டாட்டம்” கோட்டாபய அறிக்கை

“இலங்கைக்கான புதிய பயணம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் அங்கமாக இருப்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டதைப் போன்றே அமைதியாகவும், கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நாம் கொண்டாடலாம்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. அந்த அறிக்கையை அவர் தமது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

தமிழர் பகுதியில் சஜித் அபார முன்னிலை – தெற்கில் கோட்டாபய முன்னிலை

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

கோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டம்:

சஜித் பிரேமதாச – 3,12,722

கோட்டாபய – 23,261

வன்னி – முல்லைத் தீவு (உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் நடந்த பகுதி):

சஜித் பிரேமதாச – 47,594 (86.19%)

கோட்டாபய – 4,252 (7.70%)

கிளிநொச்சி மாவட்டம்:சஜித் பிரேமதாச – 55,585

கோட்டாபய ராஜபக்ச – 3,238

வவுனியா மாவட்டம்:சஜித் பிரேமதாச – 65,141

கோட்டாபய ராஜபக்ச – 13,715

முல்லைத்தீவு மாவட்டம்:சஜித் பிரேமதாச – 47,594

கோட்டாபய ராஜபக்ச – 4,252 மன்னார் மாவட்டம்:சஜித் பிரேமதாச – 53,602

கோட்டாபய ராஜபக்ச – 6,435

தபால் வாக்குகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அளித்த தபால் வாக்குகளின் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன.

01. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான தபால் வாக்களிப்பின் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 17,961 வாக்குகளை பெற்று முன்னிலையில் திகழ்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தபால் வாக்களிப்பில் 1,563 வாக்குகளை பெற்றுள்ளார்.

தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் வெளியான தபால் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 810 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

02.வன்னி

சஜித் பிரேமதாஸ – 8,402

கோட்டாபய ராஜபக்ஷ – 1,703

அநுரகுமார திஸாநாயக்க – 147

எம்.கே.சிவாஜிலிங்கம் – 144

03.திரிகோணமலை

சஜித் பிரேமதாஸ – 7,871

கோட்டாபய ராஜபக்ஷ – 5,089

அநுர குமார திஸாநாயக்க – 610

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 74

எம்.கே.சிவாஜிலிங்கம் – 49

04.திகாமட்டுல்ல (அம்பாறை)

சஜித் பிரேமதாஸ – 11,261

கோட்டாபய ராஜபக்ஷ – 10,831

அநுர குமார திஸாநாயக்க – 1,134

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 146

05.மட்டக்களப்பு

சஜித் பிரேமதாஸ – 9,221

கோட்டாபய ராஜபக்ஷ – 1,255

அநுர குமார திஸாநாயக்க – 349

06.நுவரெலியா

கோட்டாபய ராஜபக்ஷ – 9,151

சஜித் பிரேமதாஸ – 7,696

அநுர குமார திஸாநாயக்க – 638

07.மாத்தளை

கோட்டாபய ராஜபக்ஷ – 13,405

சஜித் பிரேமதாஸ – 6,165

அநுர குமார திஸாநாயக்க – 987

08.கொழும்பு

கோட்டாபய ராஜபக்ஷ – 21,717

சஜித் பிரேமதாஸ – 8,294

அநுர குமார திஸாநாயக்க – 2,229

09.கம்பஹா

கோட்டாபய ராஜபக்ஷ – 30,918

சஜித் பிரேமதாஸ – 12,125

அநுர குமார திஸாநாயக்க – 3,181

10.களுத்துறை

கோட்டாபய ராஜபக்ஷ – 22,586

சஜித் பிரேமதாஸ – 9,172

அநுர குமார திஸாநாயக்க – 1,912

11.ஹம்பாந்தோட்டை

கோட்டாபய ராஜபக்ஷ – 12,983

சஜித் பிரேமதாஸ – 3,947

அநுர குமார திஸாநாயக்க – 1,731

12.காலி

கோட்டாபய ராஜபக்ஷ – 25,099

சஜித் பிரேமதாஸ – 9,093

அநுர குமார திஸாநாயக்க – 2,450

13.மாத்தறை

கோட்டாபய ராஜபக்ஷ – 19,379

சஜித் பிரேமதாஸ – 5,782

அநுர குமார திஸாநாயக்க – 2,153

14.புத்தளம்

கோட்டாபய ராஜபக்ஷ – 7,645

சஜித் பிரேமதாஸ – 4,685

அநுர குமார திஸாநாயக்க – 764

15.குருநாகல்

கோட்டாபய ராஜபக்ஷ – 45,193

சஜித் பிரேமதாஸ – 23,432

அநுர குமார திஸாநாயக்க – 4,400

16.பொலன்னறுவை

கோட்டாபய ராஜபக்ஷ – 9,285

சஜித் பிரேமதாஸ – 5,835

அநுர குமார திஸாநாயக்க – 1,234

17.அநுராதபுரம்

கோட்டாபய ராஜபக்ஷ – 28,957

சஜித் பிரேமதாஸ – 15,367

அநுர குமார திஸாநாயக்க – 2,740

18.பதுளை

கோட்டாபய ராஜபக்ஷ – 21,772

சஜித் பிரேமதாஸ – 11,532

அநுர குமார திஸாநாயக்க – 2,046

19மொனராகலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ஷ – 13,754

சஜித் பிரேமதாஸ – 6,380

அநுர குமார திஸாநாயக்க – 1,340

20.இரத்தினபுரி

கோட்டாபய ராஜபக்ஷ – 19,061

சஜித் பிரேமதாஸ – 7,940

அநுர குமார திஸாநாயக்க – 1,678

21.கேகாலை

கோட்டாபய ராஜபக்ஷ – 19,869

சஜித் பிரேமதாஸ – 9,868

அநுர குமார திஸாநாயக்க – 1,497

22.கண்டி

கோட்டாபய ராஜபக்ஷ – 34,748

சஜித் பிரேமதாஸ – 16,303

அநுர குமார திஸாநாயக்க – 268

தேர்தல் முறையும் – வாக்கு எண்ணிக்கையும்

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் என்றபோதும் இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன. அதுபோல முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இப்படி இவை பகுக்கப்பட்டன. எனவேதான் நிர்வாக மாவட்டங்களை விட தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்று குறைவாக இருக்கின்றன.

வாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாவார்.

இலங்கை தேர்தல்: வெல்லப்போவது யார், கடந்த கால தரவுகள் சொல் தரவுகள் சொல்வது என்ன?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, மூன்றாவது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும். முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும்.

தபால் வாக்குகள் மட்டும் மாவட்ட வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Sources : BBC Tamil

Back to top button