செய்திகள்

கோர விபத்தில் இருவர் பலி – 05 பேர் காயம்

கோட்டை – மஹல்வராவ பிரதேசத்தில் ஜீப் ரக வாகனம் மற்றும் அரச பேருந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்து 05 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை குறித்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீப் ரக வாகனத்தின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மீகொடை – பனாலுவ பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்தில் இருவர் பலி - 05 பேர் காயம் 1


Back to top button