செய்திகள்

இன்றைய நாள் (17-11-2018)

“உங்கள் பலத்தோடு மட்டும் போராடுங்கள் பிறரின் பலவீனத்தோடு அல்ல…!” : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

17-11-2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் சனிக்கிழமை.

நாள் சனிக்கிழமை
திதி நவமி காலை 10.20 வரை பிறகு தசமி
நட்சத்திரம் சதயம் பகல் 1.39 வரை பிறகு பூரட்டாதி
யோகம் அமிர்தயோகம் பகல் 1.39 வரை பிறகு மரணயோகம்
ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை
நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம் பூசம் பகல் 1.39 வரை பிறகு ஆயில்யம்
சூலம் கிழக்கு

மேஷம்: உற்சாகமான நாள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

ரிஷபம்: அதிகாரிகளின் சந்திப்பும், அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படுவதுடன், அவர்களுக்காக பணச் செலவும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் அதனால் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசிகள் பெறும் வாய்ப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். மாலையில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம்: உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர் பார்த்த சலுகை கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடம் ஏற்படக்கூடும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு வகைகளில் கவனமாக இருக்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்: இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

தனுசு: தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்களின் உதவியுடன் விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடவும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்களால் ஆதாயத்துடன் செலவுகளும் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

மீனம்: தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்கு மேல் ஈடுபடுவது நல்லது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

இன்றைய நாள் (17-11-2018) 1

Back to top button