செய்திகள்

இன்றைய நாள் (18-12-2018)

“திட்டமிடல் வாழ்கையில் அவசியாமாய் இருக்கிறது, ஆனால் திட்டமிட்டபடி வாழ்வு செல்லாவிடின் வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு திட்டமிடுங்கள் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள்..!” : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.

18.12.2018 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 03 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை.

நாள் செவ்வாய்க்கிழமை
திதி ஏகாதசி
நட்சத்திரம் அசுவினி
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை
எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை
நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை/ மாலை 4.30 முதல் 5 வரை
சந்திராஷ்டமம் உத்திரம்
சூலம் வடக்கு
மேஷம்: காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்: தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
சிம்மம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பேசும்போது உஷாராக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
தனுசு: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மகரம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கு வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், விறுவிறுப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மீனம்: பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
இன்றைய நாள் (18-12-2018) 1

Back to top button