செய்திகள்

செவ்வாய் பெயர்ச்சி 2019 : இந்த 4 ராசிக்காரங்களுக்கும் திடீர் யோகம் ஏற்பட போகுதுதாம்!

ரிஷபம் ராசியில் இருந்த செவ்வாய் பகவான் மிதுனம் ராசியில் உள்ள ராகு உடன் இணைந்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி வரை மிதுனத்தில் சஞ்சரிக்கின்றார்.

இந்த செவ்வாய் பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஏனெனில் செவ்வாய் ராகு உடன் இணைகிறார் கூடவே சனி பார்வை கிடைக்கிறது.

அந்தவகையில் மே 7 முதல் ஜூன் 22 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை தேவை, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது என்று பார்ப்போம்.

மேஷம்
ராசி அதிபரி செவ்வாய் முன்றாம் வீட்டில் பலமாக அமர்ந்துள்ள ராகு உடன் இணைந்து அமைந்துள்ளது யோகமான அமைப்பாகும்.

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்கால ராகு பலமாக இருக்கிறார். அனைத்திலும் யோகத்தை தரக்கூடியவர். தீய கிரகத்தின் சேர்க்கை, பார்வை படுவதால் மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் எச்சரிக்கை தேவை.

மிதுன ராசிக்காரர்களுக்கு முடிவெடுப்பதில் குழப்பம் பிரச்னை வரும் தனுசு ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. மகரம், கும்பம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சுவார்த்தை, உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும் போது கவனம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்கிறார். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பாதிப்புகளை தடுக்க முருகப்பெருமானை வணங்கி தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். மன அழுத்தம் ஏற்படும் காரணம் சனிபகவானின் நேரடி பார்வையும் கேதுவின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் உள்ள செவ்வாய், ராகு மது விழுகிறது.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முருகப்பெருமானை வணங்கி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

கடகம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணி செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். தினசரியும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

சிம்மம்
லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. சூரியனுக்கு நண்பன் தளபதி செவ்வாய் லாபத்தில் அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வாக்கில் கடினம் இருக்கும். நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம்.

பணவருமானம் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சனி பார்வை பெறுவதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை.

கன்னி
பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வதால் திடீர் யோகம் அமையும். சனி பகவான் செவ்வாயை பார்ப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ராகு உடன் செவ்வாய் இணைவது உங்களுக்கு சிறப்பு. தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம்.

உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும். உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். சனியின் நேரடி பார்வையால் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. முதுகு பிரச்சினைகள் வரலாம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

உடல் நலப்பிரச்சினைகள் தீரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுக்கு சிறப்பானதல்ல வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.

நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். ராகு உடன் செவ்வாய் இணைந்திருப்பது கூடவே சனியின் பார்வையும் சிறப்பானதல்ல.

முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசியில் ஜென்ம சனி கூடவே கேது அமர்ந்திருக்கின்றனர். ஏழாம் வீட்டில் செவ்வாய் நேரடியாக அமர்ந்து ராசியில் உள்ள சனியை பார்க்கிறார்.

வீட்டில் தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படும். ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும்.

செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி சண்டை சச்சரவை தவிர்க்கவும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களே. செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் உச்சமடைபவர். அவர் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும்.

தனவரவு திருப்திகரமாக இருக்கும். ராசி அதிபதிக்கு அவர் பகை கிரகம் என்றாலும் ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.

உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும். அதே நேரத்தில் உங்கள் ராசி நாதன் சனிபகவான் பார்வையிடுவதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதனின் நேரடி பார்வையில் விழுகிறார் செவ்வாய் பகவான்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம்.

கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். கூடவே ராகுவும் அமர்ந்திருப்பதால் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் பகவானால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் பார்வை விழுவதால் தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். செவ்வாய்கிழமை கந்த சஷ்டி கவசம் படிக்க கவலைகளும் துன்பங்களும் பறந்தோடும்.

செவ்வாய் பெயர்ச்சி 2019 : இந்த 4 ராசிக்காரங்களுக்கும் திடீர் யோகம் ஏற்பட போகுதுதாம்! 1

Back to top button