செய்திகள்

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு!

எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2020 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதனை கருத்திற் கொண்டே இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல ஆண்டுகளாக வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button