செய்திகள்
Trending

பருத்தித்துறையில் மேலும் 3 பேருக்கு கொரோனா, சற்று முன்னர் உறுதி

பருத்தித்துறையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பருத்தித்துறை ஓடக்கரையில் கொரோனா தொற்று க்குள்ளான நபரின் வீட்டில் இருந்தவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு சற்று முன்னர் வந்ததை அடுத்தே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

குறித்த வீட்டில் இருந்த தொற்றுக்குள்ளானவரின் மனைவி, குழந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது மூவரையும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சுகாதார அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

மேற்படி மூவரும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களாவர்.

இதனுடன் வடமராட்சியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆக மாறியுள்ளது.

Source : Tamilvalam

Source
Tamilvalam
Back to top button