செய்திகள்

நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

எச்சரிக்கை: சில புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானமாகத் தொடரவும்!
Source : http://www.virakesari.lk/article/54320

நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அருகாமையிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 25 பேரும், கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தோவாலயம் மற்றும் கொழும்பு மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் உயிரிழந்தவர்களில் 24 பேருடைய சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையினுடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இந் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவர்கள் பலர் சத்திரசிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு! 1
நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு! 2

Back to top button