செய்திகள்

தமிழ் கடவுளின் பெயரை மகனுக்கு சூட்டிய நடிகர் கார்த்தி.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் – actor karthi son name

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் பெயர் பெற்றவர் நடிகர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரன் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அதன்பின்னர் நிறைய வெற்றிப்படங்களையே கொடுத்தார்.

இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே, உமையாள் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி ரஞ்சனி தம்பதிகளுக்கு, இரண்டாவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று பெயரிட்டுள்ளார் கார்த்தி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.

actor karthi son name
actor karthi son name

அன்புடன்… அப்பா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், குழந்தையின் கைகள் முருகனின் வேலை நினைவுப்படுத்துகிறது.

Back to top button