செய்திகள்

கொழும்பு – மட்டக்களப்பு விமான சேவை ஆரம்பம்

Image result for serendib airways

மட்டக்களப்பு, வவுணதீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.

இவ்விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இந்த விமானசேவையை நேற்று (Mar-1) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.


கொழும்பு - மட்டக்களப்பு விமான சேவை ஆரம்பம் 1

Back to top button