செய்திகள்

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த பலர் தாயகம் திரும்பினர்

குவைட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்த 28 இலங்கை பணியாளர்கள் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களுள் 26 பேர், பெண்கள் என எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

யு எல் 230 என்ற விமானத்தின் மூலம் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த பலர் தாயகம் திரும்பினர் 1


Back to top button