செய்திகள்

இந்த கிழமையில் பிறந்தவர்கள் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாம்.. எந்த கிழமை என்று தெரியுமா?..

ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை நாம் பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் என ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. ஜாதகத்தை பொறுத்தவரை அனைத்தையும் விட முக்கியமானது நாம் பிறந்த நாளாகும். ஏனெனில் நம்முடைய விதியை தீர்மானிப்பதில் நாம் பிறக்கும் கிழமைக்கு முக்கியமான பங்குள்ளது. சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு குணமுள்ளது.
மத வேதங்கள் ஒவ்வொருக் கிழமைக்கும் ஒரு குணம் உள்ளது என்று கூறுவது போல ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு வேலையையும் ஒதுக்கியுள்ளது. இந்த வேலைகளை அதற்குண்டான நாட்களில் செய்யும்போது அதன் பலன் முழுமையாக உங்களை வந்தடையும் என்று வேதங்கள் கூறுகிறது. மேலும் நமது செயல்பாடுகளிலும் நாம் பிறந்த கிழமைகள் அதிக ஆளுமையை வெளிப்படுத்தும். இந்த பதிவில் ஒவ்வொரு கிழமையிலும் செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்களின் சிந்தனைகள் எப்பொழுதும் சிறந்ததாக இருக்கும். இவர்களின் கற்பனைத்திறனும், பழகும் விதமும் இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இவர்களின் ஆற்றலால் இவர்கள் இருக்குமிடம் எப்பொழுதும் பிரகாசமாய் இருக்கும். ஞாயிற்று கிழமையில் நீங்கள் செய்ய வேண்டியவை ஆயுர்வேத மருந்துகளை எடுத்து கொள்வது, வாகனங்கள் வாங்குவது, செல்லப்பிராணிகள் வாங்குவது, வீட்டு கடவுளை வழிபடுவது போன்றவற்றை செய்யலாம்.
திங்கள் கிழமை
திங்கள் கிழமையில் பிறந்தவர்களின் மாண்பும், இரக்க குணமும் எப்பொழுதும் மற்றவர்களை கவர்வதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். இவர்கள் உணர்ச்சி மிக்கவர்களாகவும், குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவராகவும் இருப்பார்கள். திங்கள் கிழமையன்று தோட்ட வேலைகள், புது துணி வாங்குவது, கோவிலுக்கு செல்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.
செவ்வாய் கிழமை
செவ்வாய் கிழமைகளில் பிறந்தவர்கள் சண்டை போடுவதற்காகவே பிறந்தவர்கள், அவர்கள் தங்களின் பிடிவாதத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்கள் பயமில்லாதவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், பொறுமையில்லாதவராகவும் இருப்பார்கள். உளவு வேலைகள் பார்ப்பதற்கு செவ்வாய் கிழமை சிறந்த நாளாகும், வாக்குவாதங்களில் ஈடுபட, நீதிமன்ற வேலைகளை கவனிக்க செவ்வாய் கிழமை சரியான நாள். செவ்வாய் கிழமையன்று கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
புதன் கிழமை
இந்த நாளில் பிறந்தவர்கள் அமைதியற்றவர்கள் அதேசமயம் நன்றாக பேசக்கூடியவராகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் சோம்பல் என்பதே இருக்காது ஆனால் இவர்கள் பல சூழ்நிலைகளில் அலட்சியமாக இருக்க வாய்ப்புள்ளது. கடன் கொடுக்க, வீடு கட்டும் வேலைகளை தொடங்க, படிப்பை ஆரம்பிக்க புதன் கிழமை பொன்னான நாளாகும்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் நன்றாக பழக்கூடியவர்களாகவும், வசீகரமான தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் பொறாமை குணம் அதிகமிருக்கும். இவர்களுக்கு தத்துவம் சார்ந்த ஒரு புறமும் இருக்கும், இவர்களின் சிந்தனை எப்பொழுதும் உயர்ந்ததாக இருக்கும். பக்தி புத்தகங்கள் படிக்க, வீட்டில் யாகம் செய்ய, புதிய பதவி ஏற்க போன்றவைகளுக்கு வியாழக்கிழமை சிறந்த நாளாகும்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் அன்பின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள், தன்னை சுற்றி இருபவர்களிடம் வலிமையான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவதே இவர்களின் பிரச்சினையாகும், இதனால் இவர்கள் அடிக்கடி மனமுடைந்து போக வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமையன்று குடும்பத்தினருடனும், வாழ்க்கைத்துணையுடனும் நிச்சயம் நேரம் செலவழிக்க வேண்டும். தானம் செய்வது, குடும்பத்துடன் வெளியே செல்வது போன்ற செயல்களை வெள்ளிக்கிழமையில் செய்யவேண்டும்.
சனிக்கிழமை
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொதுவாக பழைய ஆன்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எளிமையானவர்கள் அனைத்து வேலைகளையும் பொறுமையாகத்தான் செய்வார்கள். ஆனால் இவர்களின் உள்ளுணர்வு சிறப்பானதாக இருக்கும். இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். புதுவீட்டிற்கு குடி போக, செடிகள் நட, பரிகாரங்கள் செய்ய சனிக்கிழமை மிகச்சிறந்த நாளாகும்.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாம்.. எந்த கிழமை என்று தெரியுமா?.. 1

Back to top button