செய்திகள்

இந்தியாவில் குண்டு வெடிப்பு! – பலர் பலி!

இந்தியாவின் மஹாராஷ்ரா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த 15 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்ரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து மாவோயிஸ்ட் போராளிகளினால் இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் , குறித்த போராளிகள் குர்கேடா பிதேசத்தில் 25 வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஏப்ரல் 22ம் திகதி இந்தியாவின் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட் போராளிகளை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் உயிரிழந்திருந்தனர்.

அதற்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் குண்டு வெடிப்பு! - பலர் பலி! 1


Back to top button