செய்திகள்
மன்னாரில் பயங்கர விபத்து – கண்முன்னே கணவனை இழந்த மனைவி!!
மன்னார் – தலைமன்னார் வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
உந்துருளியொன்றும் பாரவூர்தியொன்றும் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உந்துருளியில் பயணித்த இவரும் பாரவூர்தியின் கீழ் சிக்குண்டிருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த பிரதேசவாசிகள் இருவரையும் போராடி மீட்டுள்ளனர்.
எனினும் உந்துருளி செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் மன்னார் – ஆண்டாங்குளம் பகுதியை சேர்ந்த 49 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.