செய்திகள்

உங்களது வாழ்க்கையில் அடிக்கடி இந்த பிரச்சினைகள் வருகின்றதா? சனிபகவானின் மறைமுக பார்வைதான் காரணமாம்!

வாழ்க்கையில் பிரச்சினையே இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

சிலர் இதற்கு சனிபகவானின் கோபப்பார்வையே எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் சோதனைகளையும், தடைகளையும் உண்டாக்கும் என்று சொல்லப்படுகின்றது.


ஒருவரது ராசிப்படி சனிபகவான் மற்ற ராசிகளில் இருந்தாலும் அவரின் பார்வை உங்கள் மீதும் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழும்.


அந்தவகையில் சனிப்பார்வை உள்ளது என்பதை உணர்த்தும் செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.


காலணி தொலைந்தால் கெட்ட நேரம் போய்விடும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் உங்கள் காலணியை இழந்து விட்டாலோ அல்லது அடிக்கடி பழுதானாலோ உங்கள் மீது சனியின் கோபப்பார்வை இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் நண்பரால் துரோகம் செய்யப்பட்டு உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலோ, கடனோடு சேர்த்து செலவுகளும் அதிகரித்தால் உங்கள் வாழ்க்கையில் சனிபகவானின் கோபப்பார்வை உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமலோ அல்லது தொடர்ந்து தோல்வி அடைந்து எதிர்காலமே இல்லை போன்ற எண்ணங்கள் தோன்றினால் அது எதார்த்தமாக நடப்பது இல்லை. சனிபகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் ஆகும்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சனிபகவானின் கோபப்பார்வை விழுந்து விட்டால் அவர்களின் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். பல்வேறு வடிவங்களில் உங்கள் திருமணத்திலும், குடும்பத்திலும் சிக்கல்கள் எழும்.

ஒருவரின் மீது சனிபகவானின் பார்வை விழுந்து விட்டால் அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்கள் எதிர்மறை சக்திகளை நோக்கியே செல்லும். போதை பழக்கம் மற்றும் பிற சீர்கேடான செயல்களுக்கு அவர்கள் எளிதில் அடிமையாகி விடுவார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் தவறான இடத்தில் சனிபகவான் வந்து விட்டால் அவர்கள் சோம்பேறித்தனம் அதிகம் உள்ளவர்களாகவும், வேலையை தட்டி கழிப்பவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.

சனிபகவான் ஆரோக்கியம் மட்டுமின்றி தோற்றத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துவார். சனிபகவானின் கோபப்பார்வை உள்ளவர்கள் இளம்வயதிலேயே நரை முடி, அதீத முடி இழப்பு போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கு எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலி போன்றவையும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

சனிபகவானின் பார்வை உள்ளவர்கள் அதிக அவமானங்களை சந்திக்க நேரிடும். வீண்பழிகளை சுமந்தாலோ அல்லது செய்யாத தவறுக்கு தண்டனைகள் அனுபவித்தாலோ அவர்கள் மீது சனிபகவானின் கோபப்பார்வை உள்ளது என்று அர்த்தம்.

ஒருபோதும் ஏழைகளை அவமதிக்கவோ அல்லது அவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தவோ முயற்சிக்காதீர்கள். உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளால் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு காரணம் சனிபகவானாகத்தான் இருப்பார்.

உங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் ஆரோக்கிய பிரச்சினைகளாலோ அல்லது எதிர்பாராத திடீர் செலவுகளாலோ கரைந்தால் உங்கள் மீது சனிபகவான் உச்ச கோவத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்.
Image result for saniswaran

Back to top button