செய்திகள்

கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்

Source : http://gossip.sooriyanfm.lk/12815/2019/03/sooriyanfm-gossip.html?fbclid=IwAR2-sOWBUHBSoKlJ2ADPtUSnpqevgKPn5qcNeQAywaZeBeFUXWZRJIFxvZ4

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தை, ஒன்று 60 அடி ஆழமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாகவும் குழந்தையை மீட்கும் தீவிர பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் கவால்துறையினர் ஈடுபட்டுவருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாநிலத்தின் ‘ஹிசார் மாவட்டத் தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடைபெற்றபோது, நதீம் என்ற குறித்த குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த 60 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள், குழந்தையை உயிரோடு மீட்டெடுக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருவதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தையை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த தேசிய மீட்புப் படையும், அவர்களுக்கு உதவியாக உள்ளாட்சி மற்றும் காவல்துறை பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக ஆழ்துளைக்குள் விழுந்துள்ள குழந்தை நன்றாக மூச்சுவிடுவதற்காக நிலத்தடிக்குள் காற்றோட்டத்தை உருவாக்கும் கருவியைக் கொண்டு, ஓக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், மருத்துவக் குழு ஒன்றும் அவ்விடத்திற்குச் சென்று குழந்தைக்கான மருத்துவ உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 165 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்றை, 30 மணிநேர கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பீஹார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் பதிவாகியிருந்தது.

எனினும் ஆழ்துளைக் கிணறுகள் பயன்பாட்டுக்கு வரும்வரை சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியை உரியவர்கள் பின்பற்ற வேண்டும். இதில் தவறிவிழும் குழந்தைகள் சிலநேரங்களில் உயிர் பிழைப்பதே அரிதாகும் சூழல் ஏற்படுவதையும் ஆழ்துளைக் கிணறு தோண்டுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம் 1

Back to top button